‘7 ரன், 5 விக்கெட்’ ‘மிரள வைத்த பந்து வீச்சு’.. பவுலிங் சீக்ரெட்டை சொன்ன பும்ரா..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Aug 27, 2019 11:36 AM
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசியது குறித்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவா மைதானத்தில் நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 318 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இதில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து பும்ரா அசத்தினார்.
இதுகுறித்து தெரிவித்த பும்ரா, ‘முன்பு நான் அதிகமாக இன்ஸ்விங்கர்களை வீசி வந்தேன். இப்போது டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக விளையாடியதால் அவுட் ஸ்விங்கர்களை வீசுவதில் கூடுதல் தன்னம்பிக்கை வந்துள்ளது. நானும் இஷாந்த் ஷர்மாவும் பவுலிங் க்ரீசின் அகலத்தை நன்றாக பயன்படுத்தி ஸ்விங் செய்கிறோம். இரண்டாவது இன்னிங்ஸின்போது மைதானம் ப்ளாட்டாக இருந்தது. அதனால் அதிகமான ஸ்விங்கை பயன்படுத்தினோம். என்னுடைய ஒவ்வொரு பந்தின் பின்னும் கடினமான உழைப்பு உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
