‘வெளியான ஐசிசி டெஸ்ட் தரவரிசைப்பட்டியல்’.. மாஸ் காட்டிய 3 இந்திய வீரர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Aug 28, 2019 08:53 AM
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப்பட்டியல் வெளியாகியுள்ளது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்று கிட்டதட்ட முடிவடைந்துள்ள நிலையில் தற்போது தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 910 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்து வருகிறார். இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் உள்ளார். இவர் விராட் கோலி காட்டிலும் 6 புள்ளிகளே (904) பின் தங்கியுள்ளார். மூன்றாவது இடத்தில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (878) உள்ளார்.
இதனை அடுத்து பந்து வீச்சளார்களில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா (774) தரவரிசைப்பட்டியலில் 9 இடங்கள் முன்னேறி 7 -வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் (908) நீடித்து வருகிறார். இதில் ஆஷஸ் தொடரில் ஒற்றை ஆளாய் கலக்கிய பென் ஸ்டோக்ஸ், ஆல்ரவுண்டர் தரவரிசையில் 2 -வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர் ரஹானே (709) 11 -வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
