'இங்க இதான் சிஸ்டம்.. தோனிக்கும் இதான் நடக்கும்.. ஆனா'.. மனம் திறந்த கிரிக்கெட் பிரபலம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Aug 27, 2019 11:48 AM

தோனி இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருக்க முடியாது என்பதை இந்திய அணி உணர்ந்துகொள்ள வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி தெரிவித்துள்ளார்.

MS Dhoni has to take that decision, sourav ganguly

தோனியால் நீண்ட காலம் விளையாட முடியாது என்பதுதான் நிதர்சனம் என்றும், ஆனால் அதே சமயம் அந்த முடிவை தோனிதான் எடுக்க வேண்டும் என்றும் கங்குலி குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமின்றி, விளையாட்டைப் பொருத்தவரை எல்லா நட்சத்திர வீரர்களுமே ஒருநாள் ஓய்வு பெற்றுதான் ஆகவேண்டும் என்றும் கங்குலி பேசினார்.

உதாரணமாக கால்பந்தில் மரடோனாவும், கிரிக்கெட்டில் டெண்டுல்கர், லாரா, பிராட்மேன் என எல்லாரும் ஒருநாள் தங்களின் விளையாட்டு வாழ்க்கையை பற்றிய ஒரு முடிவுக்கு ஒரு கட்டத்தில் வந்தனர். இதுதான் தோனிக்கும் நடக்கும் என்றும், இதுதான் சிஸ்டம் என்றும் கங்குலி கூறியுள்ளார்.

எனவே, தோனிதான், தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்றும், தன்னிடம் ஒரு அணியில் நீடிப்பதற்கான ஆற்றல் இன்னும் எவ்வளவு இருக்கிறது என்றும் முடிவு செய்ய வேண்டும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.