‘முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, தோனி’... ‘சாதனையை காலி செய்த கிங் விராட் கோலி'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Aug 26, 2019 01:08 PM

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றதை அடுத்து, கேப்டன் விராட் கோலி சில சாதனைகளைப் செய்துள்ளார்.

Virat becomes most successful India captain in overseas Tests

மேற்கிந்திய தீவு - இந்திய அணிக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது ஆன்டிகுவாவில் நடைப்பெற்று முடிந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சில சாதனைகளை படைத்திருக்கிறார் விராட் கோலி.

வெளிநாட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டன் என்னும் சாதனையை கங்குலி படைத்திருந்தார். அவர் கேப்டனாக இருந்து 11 வெற்றிகளைப் பெற்றிருந்தார். இந்நிலையில், 12 போட்டிகளில் வெற்றி பெற்று அந்தச் சாதனையை முறியடித்துள்ளார் கோலி. அதோடு, டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த இந்திய கேப்டன் என்னும் சாதனையைத் தோனியுடன், விராட் கோலி பகிர்ந்துள்ளார். 60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து, 27 வெற்றிகளைப் பதிவுச் செய்துள்ளார் மகேந்திர சிங் தோனி.

தோனியின் ஓய்வுக்கு பிறகு 2014-ம் ஆண்டு இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக பதவி ஏற்ற கோலி, இதுவரை 47 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியுள்ளார். தற்போது 47 போட்டிகளிலேயே 27-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார் விராட் கோலி. இதன்மூலம் தோனியின் சாதனையை, விராட் கோலி சமன் செய்துள்ளார். மேலும் விரைவில் சர்வதேச அளவில் அதிக வெற்றிகளைப் பெற்ற டெஸ்ட் கேப்டன் என்ற சாதனையும் விராட் கோலி படைப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.