‘மைதானத்தில் திடீரென தாக்கிய மின்னல்’.. 6 ரசிகர்கள் படுகாயம்..! அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Aug 25, 2019 01:59 PM

கோல்ப் மைதானத்தில் மின்னல் தாக்கி 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Fans injured by lightning strike at PGA Tour finale

அமெரிக்காவின் அட்லாண்டாவில் பிஜிஏ டூர் சாம்பியன்ஷிப் கோல்ப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியைக்காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு வந்துள்ளனர். அப்போது திடீரென புயல் காற்று வீசியுள்ளது. இதனால் ரசிகர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அப்போது ஒரு சில ரசிகர்கள் மரத்தின் அடியில் நின்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியுள்ளது. இதில் மரத்தின் கீழ் நின்றுகொண்டிருந்தவர் மீது மின்னல் தாக்கியுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உடனே அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மீன்னல் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #PGATOURCHAMPIONSHIP #FANS #INJURED #LIGHTNINGSTRIKE