'சும்மா இருக்க காரை ஏன் உடைக்குறிங்க'... 'பிக் பாஸ்' பிரபலத்தை 'ரவுண்டு கட்டிய' மக்கள்... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Aug 30, 2019 09:40 AM

காரை, சேதப்படுத்தியதாக நடிகர் மற்றும் பிக் பாஸ் பிரபலமான ஹுச்சா வெங்கட்டை பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Kannada actor Huccha Venkat thrashed by mob for allegedly damaging car

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல பரிமாணங்களில் கலக்கி வருபவர் கன்னட நடிகர் ஹூச்சா வெங்கட். இவருக்கும் சர்ச்சைக்கும் பிரிக்க முடியாத பிணைப்பு என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு சர்ச்சைகளில் சிக்குபவர் தான் வெங்கட். நடிகை ஒருவர் தன்னை காதலிக்கவில்லை என்பதற்காக தற்கொலைக்கு முயன்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் குடகு சென்ற இவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். குடகு பகுதியில் சாலையில் நின்றிருந்த கார் ஒன்றை அவர் திடீரென்று கதவை இழுத்தும் கல்லால் எறிந்தும் தாக்கினார். இது அந்த பகுதியில் இருந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதையடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் திடீரென்று அவர் மீது சரமாரியாகத் தாக்க தொடங்கினார்கள்.

இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து வெங்கட்டை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் ஹூச்சா வெங்கட் தாக்கப்படும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #ACTOR #KARNATAKA #KANNADA ACTOR #HUCCHA VENKAT #KODAGU #BIGGBOSS