‘டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்’.. முதல் இடத்தை பிடித்த அணி எது..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Aug 26, 2019 11:39 PM
ஐசிசி டெஸ்ட் சாம்பியன் தொடருக்கான புள்ளிப்பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஐசிசி இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதன் முதல் சுற்று கிட்டதட்ட முடிந்துள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி அடைந்தது. இதன்மூலம் 60 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் இருந்து வருகிறது. அதேபோல் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வென்று இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.
நேற்று நடந்து முடிந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது. இத்தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் ஒரு போட்டி ட்ராவில் முடிந்தது. அதனால் இரு அணிகளுக்கு தலா 32 புள்ளிகள் வழங்கப்பட்டன. இதில் ஆஸ்திரேலியா புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திலும், இங்கிலாந்து நான்காவது இடத்திலும் உள்ளது.
