‘தோனிய ரீப்ளேஸ் பண்ண இவர்தான் சரியான ப்ளேயர்’.. சேவாக் சொன்ன அந்த பிரபல வீரர்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 23, 2019 05:48 PM

தோனியின் இடத்தை நிரப்புவதற்கு சரியான வீரர் ரிஷப் பந்த் தான் என சேவாக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Rishabh Pant best man to replace MS Dhoni, says Sehwag

உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில், டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் இந்தியா வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனை அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விக்கெட் கீப்பர் தோனி விளையாடவில்லை. பாரா மிலிட்டரியில் சேவை செய்ய சென்றதால் 2 மாதம் விடுப்பில் தோனி சென்றார். இதனால் அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக அணியில் இடம் பிடித்தார். வெஸ்ட் இண்டீஸிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ரிஷப் பந்த் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் அணியில் ரிஷப் பந்த் -ன் இடம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், ‘ரிஷப் பந்த்தான் சரியான தேர்வு என நினைக்கிறேன். இவர் டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார். தோனியின் இடத்தை நிரப்ப இவர்தான் சரியான வீரர்’ என சேவாக் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

Tags : #BCCI #MSDHONI #RISHABHPANT #TEAMINDIA #INDVWI #CRICKET #VIRENDERSEHWAG