இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளர்..! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 23, 2019 10:24 AM

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரதோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Vikram Rathour set to replace Bangar as India\'s batting coach

சில தினங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து உதவி பயிற்சியாளர்களுக்கான நேர்காணல் சமீபத்தில் நடைபெற்றது. இதன் முடிவில் பௌலிங் பயிற்சியாளராக பரத் அருண் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக ஆர்.ஸ்ரீதர் ஆகிய இருவரும் தொடர்கின்றனர்.

இந்நிலையில் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரதோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் இந்திய அணியில் 7 ஒருநாள் போட்டி மற்றும் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் முதல் தர கிரிக்கெட்டில் 146 போட்டிகளில்  விளையாடி 33 சதங்கள் உட்பட 11,473 ரன்களை குவித்துள்ளார். அதேபோல் இந்திய அணியின் உடல் தகுதி நிபுணராக நிதின் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags : #BCCI #TEAMINDIA #VIKRAMRATHOUR #BATTINGCOACH #CRICKET