‘புயல் வேகத்தில் பந்து வீசி ஸ்டம்பை பறக்க விட்ட பும்ரா’ ‘மிரண்டு போன வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்’.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 26, 2019 10:54 AM

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டேரன் ப்ராவோவை போல்ட் செய்த பும்ராவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Bumrah sends Darren Bravo\'s off stump cartwheeling

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவா மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 297 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணி 222 ரன்களும் எடுத்தது. இதனை அடுத்து இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 3 -ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை இந்திய அணி எடுத்தது. இதில் விராட் கோலி 51 ரன்களுடனும், ரஹானே 53 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து விளையாடிய 4 -வது நாள் ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே விராட் கோலி ஆட்டமிழந்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ரஹானே மற்றும் விஹாரி கூட்டணி நிதானமாக விளையாடியது. இதில் ரஹானே 102 ரன்களும், விஹாரி 93 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 343 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.

இதனால் 419 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. ஆனால் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்தது. இதனால் 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதில் வெஸ்ட் வீரர் டேரான் ப்ராவோவை போல்ட் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #BUMRAH #TEAMINDIA #INDVWI #TEST #CRICKET