‘அஸ்வின் விளையாடததுக்கு இதுதான் காரணம்’.. புது விளக்கம் கொடுத்த துணைக் கேப்டன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 23, 2019 01:39 PM

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் விளையாடது குறித்து இந்திய அணியின் துணைக் கேப்டன் ரஹானே விளக்கம் அளித்துள்ளார்.

Rahane explains reasons for Ashwin’s exclusion in playing XI

இந்தியா மற்று வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று ஆன்டிகுவா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆரம்பமே 3 முக்கிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து இந்திய அணி அதிர்ச்சி அளித்தது. இதில் விராட் கோலி 9 ரன்னிலும், புஜாரா 2 ரன்னிலும் மற்றும் மய்னங் அகர்வால் 5 ரன்னிலும் அவுட்டாகினர்.

இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ரஹானே மற்றும் கே.எல்.ராகுல் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் ரஹானே 81 ரன்களும், ராகுல் 44 ரன்களும் எடுத்தனர். இந்நிலையில் 203 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது. இப்போட்டியில் ரோஹித் ஷர்மா மற்றும் அஸ்வின் போன்ற மூத்த விரர்களுக்கு விளையாட இடம் கொடுக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வினுக்கு இடம் அளிக்கப்படாதது ஆச்சரியமாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அஸ்வின் மற்றும் ரோஹித் ஷர்மா ஆடும் லெவனில் இல்லாதது குறித்து இந்திய அணியின் துணைக்கேப்டன் ரஹானே விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘ரோஹித் ஷர்மா, அஸ்வின் ஆடும் லெவனில் இல்லாதது கஷ்டமான ஒன்றுதான். அணி நிர்வாகம் எப்போதும் யோசித்து சிறந்த முடிவையே எடுக்கும். இந்த பிட்ச்சில் ஜடேஜா நன்றாக பந்து வீசுவார் என அணி நிர்வாகம் நம்பியுள்ளதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆறாவதாக ஒரு பேட்ஸ்மேன் தேவைப்படுவதால் பேட்டிங் மற்றும் பௌலிங் செய்யும் விஹாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த முடிவை பயிற்சியாளரும், கேப்டனும் இணைந்து எடுத்திருக்கின்றனர்’ என ரஹானே தெரிவித்துள்ளார்.

Tags : #RAVICHANDRAN ASHWIN #RAHANE #ROHITSHARMA #TEAMINDIA #INDVWI #TEST #CRICKET