எழுதுனது 3 லட்சம் பேர், ஆனா பாஸ் பண்ணது..? அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆசிரியர் தேர்வு ரிசல்ட்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Aug 23, 2019 05:08 PM
ஆசிரியர் தகுதி தேர்வில் ஒரே ஒரு சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்திருப்பது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை (TET) ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. 1 -ம் வகுப்பு முதல் 5 -ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளிலும், 8 -ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.
அந்த வகையில் ஆசிரியர் தேர்வின் முதல் தாள் ஜீன் மாதம் 8 -ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். தேர்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியானது இதில் 1 சதவீதத்தினரே தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனை அடுத்து நடைபெற்ற இரண்டாம் தாள் தேர்வை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதியிருந்தனர்.
இந்த தேர்வின் முடிவுகள் நேற்று வெளியாகி இருந்தது. இதில் 300 -க்கும் அதிகமானோர் மட்டுமே தேர்ச்சி அடைந்திருந்தனர். மொத்தமாக தேர்வு எழுதியவர்களில் 1 சதவீகத்தினரே தேர்ச்சி அடைந்துள்ளனர். மீதமுள்ள 99 சதவீதம் பேர் தோல்வி அடைந்திருப்பது ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.