‘இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி’.. திடீரென விலகிய ஆல்ரவுண்டர்..! காரணம் என்ன..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 22, 2019 06:22 PM

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் விலகியுள்ளார்.

IND vs WI: West Indies player Keemo Paul ruled out of first Test

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று (22.08.2019) ஆன்டிகுவா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி ஏற்கனவே ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும், டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும் வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனால் டெஸ்ட் தொடரையும் வென்று கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அதேபோல் சொந்த மண்ணில் ஒரு தொடரையாவது கைப்பற்ற வேண்டும் என வெஸ்ட் இண்டீஸ் அணியும் முனைப்பு காட்டி வருகிறது.

இந்நிலையில் வெஸ்ட் அணியின் இளம் ஆல்ரவுண்டரான கீமா பால் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளாதால் அவருக்கு இப்போட்டியில் ஓய்வு அளிக்கும் முடிவை வெஸ்ட் இண்டீஸ் அணி எடுத்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு பதிலாக கம்மின்ஸ் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : #TEAMINDIA #TEST #INDVWI #KEEMOPAUL #MIGUELCUMMINS #CRICKET