‘பயிற்சி ஆட்டத்தில் விளையாடாத கோலி’.. ‘கேப்டன் ஆன ரஹானே’.. காரணம் என்ன..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Aug 20, 2019 05:53 PM
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான பயிற்சி ஆட்டம் ஆன்டிகுவா மைதானத்தில் நடந்தது.
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரை 3-0 என்ற கனக்கிலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் இந்தியா வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனை அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
இதனை அடுத்து நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் ட்ராவில் முடிந்தது. இப்போட்டியில் ரஹானே கேப்டனாக இருந்து அணியை வழி நடத்தினார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது விராட் கோலியின் கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் டெஸ்ட் போட்டியை கருத்தில் கொண்டு பயிற்சி ஆட்டத்தில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.