‘இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தருக்குதான் இடம்’.. மீண்டும் சிக்கலில் கேப்டன் கோலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 21, 2019 02:55 PM

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள வீரர்கள் தேர்வில் விராட் கோலிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Rohit Sharma or Ajinkya Rahane, who will get into the XI ?

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை ஆன்டிகுவா மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த டி20 மற்றும் ஒருநாள் தொடரை இந்தியா வென்றுவிட்டதால் டெஸ்ட் தொடரையும் வெல்லும் முனைப்பில் உள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் விளையாட உள்ள வீரர்களை தேர்வு செய்வதில் விராட் கோலிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதாவது முதல் டெஸ்ட் போட்டியில் 5 பௌலர்களுடன் இந்திய அணி களமிறங்கினால் ரஹானே அல்லது ரோஹித் ஷர்மா ஆகிய இருவரில் ஒருவருக்குதான் அணியில் இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதனால் இதில் யாரை நீக்கவது என விராட் கோலி யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் பயிற்சி ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விளையாடவில்லை. அதனால் வரயிருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவாரா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. மேலும் விக்கெட் கீப்பர் சஹா காயத்தில் இருந்து மீண்டு மறுபடியும் அணிக்கு திரும்பி இருப்பதால், ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக டெஸ்ட் போட்டியில் தொடர்வது சந்தேகமாகியுள்ளது.

Tags : #VIRATKOHLI #RAVICHANDRAN ASHWIN #RAHANE #ROHITSHARMA #TEAMINDIA #INDVWI #TEST