'கேப்டன் மேல இருக்காரு ப்ரதர்'.. CSK வீரரின் வைரல் ட்வீட்.. கொண்டாடும் 'தல' தோனி ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | May 10, 2019 06:51 PM

சிஎஸ்கே வீரர் இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங்குக்கு இணையாகவே ட்விட்டரில் பரபரப்பாக இயங்கி வருபவர்.

Captain is right there on the top brother,Imran Tahir Tweet goes viral

ரசிகர்களுக்கு உடனடியாக ரெஸ்பான்ஸ் செய்வதிலும் தங்க்லீஷில் ட்வீட் போடுவதிலும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் கவரும் இவர், தற்போதைய ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான இறுதிப் போட்டியில் மோதுவதற்கான அணியை தீர்மானிக்கக் கூடிய 2-வது தகுதி சுற்றுப் போட்டி, விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று நிகழ்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி அணியும் இந்த போட்டியில் மோதிக்கொள்ளும் நிலையில், சந்தானகிருஷ்ணன் எனும் ரசிகர் ஒருவர், தனது ட்டீம் லெவன் அணிக்கு நீங்கள்தான் கேப்டன், ஆக, சிறப்பாக விளையாடுங்கள் என்று இம்ரான் தாஹிரின் பெயரை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.

இதனை ரி-ட்வீட் செய்த இம்ரான் தாஹிர், அந்த ரசிகரின் புகைப்படத்தில் தோனியின் புள்ளிகள் அதிகமாக உள்ளதால், மேலே உயர்ந்து நிற்பதை சுட்டிக்காட்டி,  கேப்டன் மேலே இருக்கிறார் ப்ரதர் என்று ட்வீட்டியிருக்கிறார். இதனால் சென்னை அணி ரசிகர்களையே பெருத்த பாராட்டையும் தாஹிர் பெற்று வருகிறார்.

Tags : #IPL #IPL2019 #CSK #MSDHONI #IMRANTAHIR