'மரணத்திலும் இணை பிரியாத தம்பதி'... 'நெஞ்சை' உருக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 10, 2019 05:50 PM

தேனியில் கணவர் இறந்த துக்கம் தாளாமல் சில மணித்துளிகளில் மனைவியும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

husband dies after 3 hours wife also dies heartbreaking incident!

தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த முருகேசன் - ராஜம்மாள் தம்பதியருக்கு 4 பெண் 2 ஆண் என 6 பிள்ளைகள். தலை மீது துணிகளைச் சுமந்து ஊர் ஊராகச் சென்று வியாபாரம் செய்து பிள்ளைகளை கரைசேர்த்த இருவரும் தனியே வசித்து வந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் படுத்தபடுக்கையாக முருகேசனை ராஜம்மாள்தான் கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை நெஞ்சு வலிப்பதாகக் கூறிய முருகேசன், சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். அவரைப் பார்த்து கதறி அழுத்த ராஜம்மாள் அவர் மீது சாய்ந்தவாறே மயக்கமடைந்துள்ளார். அவரை, அவரது மகன்கள், மகள்கள் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறினர். பின்பு மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 'நீங்கள் என்னைவிட்டு பிரியும் தருணம்,நானும் இருக்க மாட்டேன்' என ராஜம்மாள் கணவரிடம் அடிக்கடி கூறிவந்தார் என்று சொல்லப்படுகிறது.

Tags : #COUPLE