'மாப்பிளைக்கு அம்புட்டு அவசரம்'... இருந்தாலும் 'ஒரு நியாயம் வேணாமா'?... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | May 08, 2019 10:35 PM
ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில்,டாஸ் போடும் போது டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்,செய்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே இன்று ஐபிஎல் ‘எலிமினேட்டர்’ சுற்றுப்போட்டி நடைபெற்று வருகிறது.விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில்,டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி வீரர்கள், சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டினை பறிகொடுத்தார்கள். இந்நிலையில் அணியினை தூக்கி நிறுத்த ஜோடி சேர்ந்த,குப்தில் மற்றும் மணிஷ் பாண்டே ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 36 (19) ரன்களில் குப்தில் அவுட் ஆக, 30 (36) ரன்களில் பாண்டேவும் நடையை கட்டினார்.
இந்நிலையில் விஜய் ஷங்கரின் அதிரடியால் அணியின் ஸ்கோர் சற்று உயர்ந்தது.20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 162 ரன்கள் எடுத்தது.இதனிடையே போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பு டாஸ் போடுவதற்காக இரு அணி கேப்டன்களும் களத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.அவர்களுடன் களத்தில் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேகர் வர்ணனனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது யாரும் எதிர்பாராத நிலையில்,டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் போட,உடனே சஞ்சய் மஞ்ச்ரேகர் அதனை தடுத்தார்.இதனால் மைதானத்தில் சிரிப்பலை எழுந்தது.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Skipper Iyer eager to get things started here in Vizag 😅😅 pic.twitter.com/2EwJGEuFLh
— IndianPremierLeague (@IPL) May 8, 2019
