'அவர் கிட்ட இருந்து கத்துக்கோங்க'...பரபரப்பான 'மைதானம்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | May 09, 2019 12:02 AM

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே இன்று ஐபிஎல் ‘எலிமினேட்டர்’ சுற்றுப்போட்டி நடைபெற்று வருகிறது.விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில்,டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.

Shreyas Iyer Agrees To Withdraw Run Out video goes viral

இதனிடையே டெல்லி அணி பந்து வீசிய போது ரிஷப் பண்ட் நடந்து கொண்ட விதம் ரசிகர்களிடையே கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.டெல்லி அணியில் 20வது ஓவரை பவுல் வீசினார். அந்த ஓவரில் 5வது பந்தினை அவர் ஓயிடாக வீசினார். அந்த பந்து கீப்பர் வசம் சென்றது. அதனையடுத்து, பந்தை எதிர் கொண்ட ஹூடா ரன் எடுக்க முயற்சித்தார்.உடனே விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பந்தை  ரன்னர் ஸ்டெம்பை நோக்கி வீசினார். அப்போது நடு கிரீஸில் நின்று கொண்டிருந்த பவுல் மீது,ஓடி வந்த ஹூடா மோதி கீழே விழுந்தார். ஆனால் ரிஷப் வீசிய பந்து ஸ்டெம்பில் பட்டதால் ஹூடா அவுட் ஆனார்.

இந்நிலையில் பவுல் தடுத்ததால் தான் ஹூடாரன் அவுட் ஆனார் எனவே விக்கெட் வேண்டாம் என ஸ்ரேயாஸ் ஐயர் நடுவரிடம் கூறிவிட்டு ஸ்ரேயாஸ் பீல்டிங் செய்ய திரும்பி விட்டார்.உடனே ஓடி வந்த ரிஷப் பண்ட் விக்கெட் வேண்டும் என முறையிட்டார்.அவரிடம்  ஸ்ரேயாஸ் பேசி பார்த்தும் விக்கெட் வேண்டுமென்பதில் ரிஷப் உறுதியாக இருந்தார்.

இந்த சம்பவம் ரசிகர்களிடையே கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.ஸ்ரேயாஸ் ஐயர் எடுத்த முடிவிற்காக அவரை பலரும் பாராட்டியுள்ளனர்.மேலும் ரிஷப் பண்ட் இன்னும் நிறைய கற்று கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.