'சும்மா கல்லுமாரி இருந்த மனுஷன்'... 'இப்படி அழுத்துட்டாரே'...எமோஷனலான ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | May 09, 2019 03:35 PM

கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.நடந்து முடிந்த லீக் போட்டிகளின் முடிவில், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ‘ப்ளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது. இதில் சென்னையில் நடந்த முதல் குவாலிபயர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக ‘ஃபைனலுக்கு’ முன்னேறியது.

Tom Moody Breaks Down in Tears video goes viral

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ‘எலிமினேட்டர்' சுற்று போட்டியில் டெல்லி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.இந்த போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வியை தழுவி போட்டியிலிருந்து வெளியேறியது.இதையடுத்து நாளை நடைபெற இருக்கும் இரண்டாவது தகுதி சசுற்று போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மொத இருக்கின்றன.இதில் வெற்றி பெரும் அணி இறுதி போட்டியில் மும்பை அணியை சந்திக்கும்.

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது ஹைதராபாத் தோல்வியடைந்ததை அந்த அணியின் பயிற்சியாளர் டாம் மூடியால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதனால் உணர்ச்சி வசப்பட்ட அவர்,கண்ணீர் விட்டு அழுதார்.இது ஹைதராபாத் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.இதனிடையே டாம் அழுத்த வீடியோவை ஷார் செய்து அவருக்கு ஹைதராபாத் ரசிகர்கள் ஆறுதல் கூறிவருகிறார்கள்.