“பாக்கத்தான போறீங்க எங்களோட ஆட்டத்த”!.. ‘கண்டிப்பா இன்னைக்கு சென்னைய அடிச்சு தூக்கிருவோம்’!.. மிரள வைக்கும் டெல்லி வீரரின் மாஸ்டர் பிளான்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Arunachalam | May 10, 2019 12:45 PM
விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கவுள்ள ஐபிஎல் தொடரின் 2 வது தகுதிச்சுற்று போட்டியில் சென்னை அணியை வீழ்த்த திட்டம் வைத்துள்ளதாக டெல்லி அணி வீரர் பிருத்வி ஷா தெரிவித்துள்ளார்.

12 வது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணி மோதும் 2 வது தகுதிச்சுற்று போட்டி இன்று மாலை விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்காக இரண்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நடக்கவுள்ள 2 வது தகுதிச்சுற்று போட்டி குறித்து டெல்லி அணி வீரர் பிருத்வி ஷா கூறுகையில், “போட்டியில் அனைவரும் அவரவர் பங்கை அறிவார்கள் என நினைக்கிறேன். மேலும், சென்னையுடன் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளோம் எனவே ஹர்பஜன் சிங், ஜடேஜா ஆகிய சிறந்த ஸ்பினர்களை எல்லாம் எப்படி எதிர்கொள்வது, எப்படி வீழ்த்துவது என நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
மேலும், எந்த பவுலரின் பந்தில் நிதானமாக விளையாடுவது, எந்த பவுலரின் பந்தை அடித்து விளையாடுவது என்று திட்டமிட்டு வைத்துள்ளோம். இந்நிலையில், எந்த ஒரு எளிய பந்து கிடைச்சாலும், நான் அடிச்சு விளையாடுவேன் அது தாஹிராக இருந்தாலும் சரி, ஹர்பஜனாக இருந்தாலும் சரி எளிமையாக விளையாடி அவர்களின் பந்தை சிதறடிப்பேன்.
இந்நிலையில், இன்றைய போட்டி சற்று சவாலாகவே இருக்கும். மேலும் சென்னைக்கும், எங்களுக்கும் இது சொந்த மண் கிடையாது என்று டெல்லி அணி வீரர் பிருத்வி ஷா தெரிவித்துள்ளார்.
