“இவர் டீமில் இல்லாதது ஆச்சரியம் அளிக்கிறது”! பிரபல வீரர் ட்வீட்டால் இந்திய அணியில் மாற்றம் நிகழுமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Arunachalam | May 09, 2019 12:27 PM

முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் மைக்கெல் வாகன் நேற்று நடந்த ஐபிஎல் போட்டிக்கு பின் உலக கோப்பை இந்திய அணியில் ஏன் ரிஷப் பாண்ட் இல்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

michael vaughan asked why rishab is not in the Indian WC team

12 வது ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த எலிமினினேட்டர் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி  ஐதராபாத் அணியை எதிர்கொண்டது. இதில் ரிஷப் பாண்ட் 21 பந்துகளில் 49 ரன் எடுத்தார். இதில் 5 சிக்சர் மற்றும் 2 பவுண்ட்ரிகளும் அடங்கும். இந்நிலையில், தனது ஆக்ரோஷமான ஆட்டத்தால் தோல்வியின் விளிம்பில் இருந்த டெல்லி அணியை வெற்றி பெற வைத்தார்.

இதனையடுத்து, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் வாகன் தனது ட்வீட்டர் பக்கத்தில் “உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பாண்ட் இல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும், இந்திய அணியின் வீரர்கள் தேர்வை மாற்றியமைக்க இன்னும் நேரம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

மேலும், இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக்,சஞ்சய் மஞ்ரெக்கர் மற்றும் ரிஷப் பாண்ட் ரசிகர்கள் ஏன் உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பாண்ட் இடம் பெறவில்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரிடம் ட்வீட்டர் மூலமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

 


 

  

 

Tags : #IPL2019 #ICCWORLDCUP2019 #RISHABHPANT #MICHAEL VAUGHAN #INDIAN TEAM