‘ஓவர் நைட்டில் லட்சக்கணக்கான ஃபாலோயர்கள்’.. யார் இந்த பெண்?.. ஒரே போட்டியில் வைரலான ஆர்சிபி ரசிகை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 08, 2019 01:15 AM

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ரசிகை ஒரே இரவில் இணையத்தில் ட்ரெண்டாகி அசத்தியுள்ளார்.

RCB fan girl goes viral overnight

ஐபிஎல் டி20 தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேல்ஞ்சர்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த இப்போட்டியில் பெங்களூரு அணி ஹைதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆனாலும் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை பெங்களூரு அணி இழந்தது.

இப்போட்டியைக் காணவந்த பெங்களூரு அணியின் ரசிகையான தீபிகா கோஷ் என்பவர் ஒரே இரவில் இணையத்தில் வைரலானார். போட்டியின் நடுவே தீபிகாவை அடிக்கடி டிவியில் காட்டிய வண்ணம் இருக்க, போட்டியை விட அவரை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாகினர்.

மேலும் சமூக வலைதளங்களில் அவரின் பெயரை தேட ஆரம்பித்த ரசிகர்கள், அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை கண்டுபிடித்து ஃபாலோ செய்ய ஆரம்பித்தனர். இதனால் குறைந்த ஃபாலோயர்கள் இருந்த தீபிகாவின் அக்கவுண்டில் ஒரே இரவில் லட்க்கணக்கானோர் ஃபாலோ செய்துள்ளனர். இதற்கு முன்னர் கடந்த ஆண்டு நடிகை ப்ரியா வாரியர் இதேபோல் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#RCB girl forever ❤️🏏

A post shared by deepika (@deeghose) on

Tags : #IPL #IPL2019 #DEEPIKAGHOSE #RCB