“தல தோனிகிட்ட இருக்கிற இந்த விஷயம்.... சுட்டு போட்டாலும் கோலிக்கு வராது”!... அதிரவைக்கும் பயிற்சியாளர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Arunachalam | May 10, 2019 10:58 AM
தோனி போல போட்டியை கணிக்கும் திறமை விராட் கோலியிடம் இல்லை என்று தோனியின் சிறு வயது பயிற்சியாளர் கேஷாப் ரஞ்சன் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் வருகின்ற மே 30 ஆம் தேதி தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை நடக்கவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளது.
இந்நிலையில், “உலக கோப்பைக்கான இந்திய அணியில் தோனி இருப்பது மிகப்பெரிய பலம் என்றும் அவருக்கு உள்ள தனித்திறமை தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம் இல்லை” என தோனியின் முன்னாள் பயிற்சியாளர் கேசவ் ரஞ்சன் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேலும், “போட்டியின் போக்கை கூர்ந்து கவனிக்கும் திறனும், வித்தியாசமான அனுகுமுறையும், தோனியின் தனித்திறமையும் விராட் கோலிக்கு இல்லை, அது அவருக்கு கிடைக்கவும் செய்யாது. இந்த உலக கோப்பை போட்டியில், இந்த வித்தையெல்லாம் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு கோலிக்கு கிடைத்துள்ளது.
இந்த உலக கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தோனியை நான்காவது இடத்தில் களமிறக்க முயற்சிக்க வேண்டும் என்று தோனியின் முன்னாள் பயிற்சியாளர் கேசவ் ரஞ்சன் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
