"அந்த '2' பேரு தான் எங்களுக்கு பிரச்சனையா இருப்பாங்க... அவங்களோட 'விக்கெட்' தான் எங்க 'டார்கெட்'... ஆஸ்திரேலிய 'கேப்டன்' சொன்ன 'விஷயம்'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

கடந்த முறை நடைபெற்றிருந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்திருந்தது. இதற்கு பழி தீர்க்கும் வகையில், இந்தமுறை நிச்சயம் ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்க முயலும்.
இந்நிலையில், ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெயின், எந்த இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய அணிக்கு அதிகம் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 'இந்திய கேப்டன் விராட் கோலி முதல் போட்டியுடன் திரும்புவதால் அவருக்கு அடுத்து அந்த அணியில் நிறைய திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர். கடந்த முறை இந்திய வீரர் புஜாரா அதிகம் நெருக்கடி கொடுத்தார். இந்தமுறையும் அவர் விக்கெட்டை எடுப்பதில் அதிக கவனம் செலுத்தவுள்ளோம்.
அதே போல சென்ற முறை ரஹானேவும் இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்தியிருந்தார். அவரது விக்கெட்டும் எங்களுக்கு முக்கியம் தான்' என டிம் பெயின் தெரிவித்துள்ளார். பயிற்சி ஆட்டத்தில் அதிரடியாக ஆடி சதமடித்த ரிஷப் பண்ட் குறித்தும் டிம் பெயின் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
