"இது 'நடராஜனுக்கு' கிடைக்க வேண்டியது..." 'மேட்ச்'க்கு பின்னர் 'ஹர்திக் பாண்டியா' சொன்ன கருத்தால்,.. நெகிழ்ந்து போய் 'கொண்டாடித்' தள்ளிய 'ரசிகர்கள்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதிய இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
195 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா 2 சிக்ஸர்கள் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். 22 பந்துகளில் 42 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
போட்டி முடிவுக்கு பின்னர் தான் ஆட்ட நாயகன் விருது வென்றது குறித்து பேசிய ஹர்திக், 'நடராஜனுக்கு தான் ஆட்ட நாயகன் விருது கிடைக்கும் என நான் எதிர்பார்த்தேன். மற்ற அனைத்து பந்து வீச்சாளர்களும் ரன்களை வாரி வழங்கிய போது, நடராஜன் மட்டும் சிறப்பாக பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தினார். 10 ரன்கள் குறைவாக இலக்கை அவர் எங்களுக்கு கொடுத்தார்' என நடராஜனை புகழ்ந்து ஹர்திக் பாண்டியா கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு, கடைசி ஒரு நாள் போட்டிக்கு பின்னரும் நடராஜனின் பந்து வீச்சை பாராட்டி ஹர்திக் பாண்டியா கருத்து கூறியிருந்தார். நடராஜன் முதல் முறையாக சர்வதேச அணிக்காக ஆடி வரும் நிலையில், அவருக்கான அங்கீகாரத்தை சிறந்த முறையில் அளித்து வரும் பாண்டியாவை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அதே போல, நடராஜனின் கரியர் மற்றும் பந்து வீச்சு குறித்து ஹர்திக் பாண்டியா பாராட்டி பேசிய வீடியோ ஒன்றையும் பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது.
Hardik Pandya is all praise for @Natarajan_91 👌👌#TeamIndia | @hardikpandya7 | #AUSvIND pic.twitter.com/NX0nofFZZm
— BCCI (@BCCI) December 6, 2020
மற்ற அனைத்து பந்து வீச்சாளர்களும் அதிக ரன்களை விட்டுக் கொடுக்க, நடராஜன் 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முதல் டி 20 போட்டியிலும் 3 விக்கெட்டுகளை நடராஜன் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.