"என்னால 'தோனி' மாதிரி பண்ண முடியாது..." போட்டிக்கு நடுவே 'ஆஸ்திரேலிய' கேப்டன் சொன்ன 'விஷயம்' ... வேற லெவலில் வைரலாகும் 'வீடியோ'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதிய இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

ஷிகர் தவான் 52 ரன்களும், கோலி 40 ரன்களும் எடுத்திருந்த நிலையில், 5 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்று இருந்த போது ஹர்திக் பாண்டியா இரண்டு சிக்ஸர்கள் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். முன்னதாக, இந்த போட்டியில் ஷிகர் தவான் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஒன்பதாவது ஓவரை ஆஸ்திரேலிய வீரர் ஸ்வீப்சன் வீசினர். இந்த ஓவரில் அவர் வைடு பந்தை வீசிய போது, அதனை பிடித்த விக்கெட் கீப்பரும், ஆஸ்திரேலியா அணியின் கேப்டனுமான மேத்யூ வேட் ஸ்டம்பிங் செய்தார்.
ஆனால், அவர் ஸ்டம்பிங் செய்வதற்குள் தவான் கிரீஸுக்குள் சென்று விட்டார். மூன்றாவது நடுவர் முடிவில் அவுட்டில்லை என தெரிய வந்த நிலையில் மேத்யூ வேட், 'தோனியை போல வேகமாக என்னால் ஸ்டம்பிங் செய்ய முடியவில்லை' என தவானிடம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த தவானும் 'ஆமாம்' என சிரித்துக் கொண்டே கூறினார்.
"Not Dhoni, not quick enough like Dhoni!" 😂
Live #AUSvIND: https://t.co/L1KY15FYnb pic.twitter.com/IOC7NH2xgb
— cricket.com.au (@cricketcomau) December 6, 2020
கீப்பர் நிற்கும் போது தோனியைப் போல வேகமாக செயல்படக் கூடிய கீப்பர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் மிகக் குறைவு. அதனை ஒப்புக் கொள்வது போலவே, மேத்யூ வேட் சொன்ன கருத்தும் அமைந்துள்ள நிலையில், இது தொடர்பான வீடியோக்கள் தற்போது தோனி மற்றும் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பை பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்
