"'மேட்ச்' முடிஞ்சாலும் இப்டி தூள் கெளப்புறாரே!!..." 'மேஜிக்' செய்த 'நடராஜன்'... ஆடிப் போன 'இந்திய' வீரர்கள்... வேற லெவல் 'சம்பவம்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்டிருந்த இந்திய அணியில், இந்திய அணியின் வலைப்பந்து வீச்சாளராக தமிழக வீரர் நடராஜன் அணியில் இடம்பெற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, டி 20 தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த மற்றொரு தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியிருந்த நிலையில், அவருக்கு பதிலாக டி 20 தொடரில் நடராஜனுக்கு இடம் கிடைத்தது. அதன் பிறகு, கடைசி ஒரு நாள் போட்டியிலும், மூன்று டி 20 போட்டிகளிலும் நடராஜனுக்கு இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது.
அதனை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட நடராஜன், அனைத்து போட்டிகளிலும் விக்கெட்டுகள் எடுத்து அசத்தியிருந்தார். அது மட்டுமில்லாமல், மிகவும் கடினமான பந்துகளை ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு வீசி அற்புதம் செய்திருந்தார். இந்நிலையில், நாளை மறுநாள் (டிசம்பர் 17) இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கான இந்திய அணியில் நடராஜனுக்கு இடம் இல்லையென்றாலும், அவர் வலைப்பயிற்சியில் தொடர்ந்து பந்து வீசி வருகிறார். வலைப்பயிற்சியில் மிகச் சிறப்பாக நடராஜன் செயல்பட்டு வரும் நிலையில், இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான கோலி, ரஹானே போன்றவர்கள் அவரது பந்து வீச்சை எதிர்கொள்ள சற்று சிரமப்பட்டதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
யார்க்கர் பந்து தான் நடராஜனின் பெரிய பலம் என ஐபிஎல் சமயத்தில் ஒரு கருத்து இருந்தது. வேறு பந்துகளை அவர் அதிகம் வீசமாட்டார் என்றும் ஒரு விமர்சனம் சேர்த்து முன் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆஸ்திரேலிய தொடரின் பயிற்சியின் போது, பயிற்சியாளர்கள் தெரிவிப்பது போலவே பந்துகளை துல்லியமாக வீசி வருகிறார். யார்க்கர் பந்துகள் மட்டுமில்லாமல், தேவையான நேரத்தில் பவுன்சர், ஸ்லோ என அனைத்து பந்துகளையும் வீசி இந்திய அணி பயிற்சி குழு மட்டுமின்றி வீரர்களையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார் நடராஜன்.
வருங்காலங்களில் நிச்சயம் மிகப் பெரிய இடத்தை நடராஜன் பெறுவார் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே போல சச்சின் உட்பட பல முன்னாள் வீரர்களும் நடராஜனை இந்திய டெஸ்ட் அணியில் இணைக்க வேண்டும் என தனிப்பட்ட கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
