"'நடராஜன்' பத்தி 'சச்சினே' இப்டி ஒரு விஷயத்த சொல்லிட்டாரா??!!..." இது வேற மாதிரி 'சம்பவம்'ல.. அசத்தல் 'பின்னணி'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் தனது அசத்தலான பந்து வீச்சு மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பி பார்க்க வைத்த தமிழக வீரர் நடராஜனுக்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் இந்திய அணியில் இடம் கிடைத்தது.

மற்றொரு தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக நடராஜன் சர்வதேச அணியில் இடம்பெற்றிருந்தார். டி 20 தொடரில் மூன்று போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசிய நடராஜன் மொத்தமாக 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இவரது பந்து வீச்சிற்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி டி 20 கோப்பையை கையில் வழங்கி கவுரவித்த நிலையில், தனக்கு கிடைத்த ஆட்ட நாயகன் தொடரை ஹர்திக் பாண்டியா, நடராஜனுக்கு அளித்திருந்தார். அறிமுகமான தொடரிலேயே சிறப்பாக ஆடிய நடராஜன் குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
'டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக இஷாந்த் ஷர்மா இடம்பெறவில்லை. அவர் இல்லாததால் இந்திய அணி சற்று சிரமப்படலாம். ஆனாலும் ஒரு வீரரை நம்பி இந்திய அணி இல்லை. சிறந்த அணியாக இந்திய அணி உள்ள போதும், இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக மாற்று வீரர் இடத்தில் நாம் யாரை அணியில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பது குறித்து தான் ஆலோசிக்க வேண்டும்.
நடராஜன் ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்ற ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் சிறப்பாக பந்து வீசியிருந்தார். இதனால், அவர் டெஸ்ட் அணியில் இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக இடம்பெறலாம். அவர் டெஸ்ட் அணியில் இடம்பெறுவது எனது தனிப்பட்ட கருத்தாகும். அவர் இடம்பெறுவது குறித்து இந்திய அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும்' என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
கிடைத்த முதல் வாய்ப்பிலேயே தனது பந்து வீச்சால் கிரிக்கெட் உலகின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் வரை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
