"நாளைக்கி இந்தியா 'டீம்'ல ஆடப் போறது இவங்க தான்..." அதிகாரப்பூர்வமாக 'பிசிசிஐ' வெளியிட்ட அணி 'விவரம்'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடரை இழந்திருந்த நிலையில், டி 20 தொடரை கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில், இரு அணிகள் மோதும் நான்கு டெஸ்ட் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்திய கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி இந்தியா திரும்பவுள்ளார்.
சமபலத்துடன் இரு அணிகளும் இந்த டெஸ்ட் தொடரில் மோதவுள்ள நிலையில் யார் தொடரை கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே போல, இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் லெவனில் எந்த வீரர்களை களமிறக்குவார்கள் என்றும் ரசிகர்கள் பலவிதமாக யோசித்து வந்தனர்.
இதனையடுத்து, போட்டிக்கு ஒரு நாள் முன்னதாகவே முதல் டெஸ்டில் களமிறங்கப் போகும் 11 வீரர்கள் யார் என்பது குறித்து பிசிசிஐ அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. நாளை களமிறங்கும் இந்திய அணி வீரர்கள் விவரம்: விராட் கோலி, ரஹானே, மாயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, புஜாரா, ஹனுமா விஹாரி, சஹா, அஸ்வின், உமேஷ் யாதவ், பும்ரா, ஷமி

மற்ற செய்திகள்
