"அந்த ஒரு விஷயத்தால செமயா கடுப்பாகி..." வந்த கோவத்துல பொளந்து கட்டிட்டேன்..." 'அதிரடி' சதம் குறித்து 'ரிஷப்' சொன்ன 'சீக்ரெட்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில், ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலிய அணியும், டி 20 தொடரை இந்திய அணியும் கைப்பற்றியிருந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 17 ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதனிடையே, டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக மூன்று நாள் பயிற்சி ஆட்டம் நடைபெற்றிருந்தது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 194 ரன்களும், ஆஸ்திரேலிய ஏ அணி 104 ரன்களும் எடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி ஆடிய நிலையில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 386 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்திருந்தது. இதில் ஹனுமா விஹாரி 104 ரன்களும், ரிஷப் பண்ட் 103 ரன்கள் எடுத்திருந்தனர். அதிலும் குறிப்பாக, பண்ட் 73 பந்துகளில் 9 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இரண்டாவது நாள் முடிய ஒரு ஓவர் இருந்த போது, 81 ரன்களுடன் இருந்த பண்ட், அந்த ஓவரில் 22 ரன்கள் அடித்து சதத்தை எட்டினார்.
இதுகுறித்து பேசிய ரிஷப் பண்ட், 'நான் நூறை நெருங்கிய போது ஒரு ஓவர் மட்டுமே மீதமிருந்தது. இன்னும் 20 ரன்கள் அடிக்க வேண்டியிருந்ததால் நான் சதமடிக்க மாட்டேன் என நினைத்தேன். ஆனால், அந்த ஓவரில் முதல் பந்து எனது வயிற்றுப்பகுதியில் பட்டது. அந்த கோபத்தில் தான் அதிரடியாக ஆடினேன்.
அது மட்டுமில்லாமல், மறுமுனையில் என்னுடன் இருந்த விஹாரி, என்னிடம் வந்து இன்றே உன்னால் சதமடிக்க முடியும். முயற்சி செய்து பார். இல்லையென்றால் நாளைய தினத்தில் சதமடிக்கலாம் என்றும் என்னிடம் தெரிவித்தார். இதனால் முயற்சி செய்து பார்த்ததில் அன்றே சிறப்பான சதமடித்தேன்' என தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருந்த ரிஷப் பண்ட், கடும் விமர்சனத்தை சந்தித்திருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி மற்றும் டி 20 தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பண்டிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனியிடயே, டெஸ்ட் தொடருக்கு முந்தைய பயிற்சி ஆட்டத்தில் நல்ல பாஃர்மில் அவர் உள்ளதால் டெஸ்ட் தொடரில் அவர் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.