'சர்வதேச' அரங்கில் கிடைத்த முதல் 'சான்ஸ்'... மாஸான 'சாதனை' ஒண்ணு செஞ்சு... 'தூள்' கிளப்பிய யார்க்கர் 'நடராஜன்'... குவியும் 'பாராட்டு'க்கள்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் கடைசி டி 20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி ஆடிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மேத்யூ வேட், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடியாக ஆடினார். அவர் தனது பங்கிற்கு 80 ரன்கள் குவித்து அவுட்டான நிலையில், மேக்ஸ்வெல் 54 ரன்கள் எடுத்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில், ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து இலக்கை நோக்கி இந்திய அணி ஆடி வரும் நிலையில், முன்னதாக மேக்ஸ்வெல் விக்கெட்டை தமிழக வீரர் நடராஜன் கைப்பற்றினார். அவர் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடிக்க மேக்ஸ்வெல் முயற்சிக்க, அந்த பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றிருந்த நடராஜன், கடைசி ஒரு நாள் தொடரில் களமிறங்கி சிறப்பாக பந்து வீசியிருந்தார். அதே போல, 3 டி 20 போட்டிகளிலும் அணியில் இடம்பெற்றிருந்த நடராஜன் அனைத்து போட்டிகளிலுமே விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதிலும் இன்று அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த மேக்ஸ்வெல் விக்கெட்டை போல்டு எடுத்து அவுட் செய்தார்.
மொத்தமாக, ஆறு விக்கெட்டுகளை அவர் இந்த டி 20 தொடரில் சாய்த்துள்ள நிலையில் ஒரு அபார சாதனை ஒன்றை அறிமுகத் தொடரிலேயே செய்து தனது திறமையை நிரூபித்துள்ளார் நடராஜன். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, ஆஸ்திரேலிய மண்ணில் வைத்து நடைபெற்ற டி 20 தொடர்களில் அதிகம் விக்கெட்டுகளை (6 விக்கெட்டுகள்) சாய்த்திருந்த பும்ரா, மலிங்கா ஆகியோருடன் நடராஜன் தற்போது இணைந்துள்ளார்.
கிடைத்த முதல் வாய்ப்பிலேயே மிகப் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டிருக்கும் நடராஜனை ரசிகர்கள் மட்டுமல்லாது பல கிரிக்கெட் வீரர்களும் பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
