"எங்கள சீண்டுற மாதிரி ஆடணும்னு பாத்தீங்க... நாங்களும் திருப்பி அடிப்போம்..." இளம் 'இந்திய' வீரர் சொன்ன 'அதிரடி' விஷயம்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 17 ஆம் தேதியன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலிய அணியும், டி 20 தொடரை இந்திய அணியும் வென்றுள்ள நிலையில், டெஸ்ட் தொடரை எந்த அணி கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை போட்டியின் போது எதிரணியினரிடம் வார்த்தை போரில் (ஸ்லெட்ஜிங்) ஈடுபடுவது வழக்கம். அப்படி ஈடுபடுவதால் எதிரணி வீரர்களை நெருக்கடிக்குள் ஆட வைப்பதற்கான திட்டம் தான் அது.
இந்நிலையில், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான சுப்மன் கில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து கூறுகையில், 'இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளின் போது அதிகளவில் ஆக்ரோஷம் காட்டமாட்டாரகள் என்றொரு பெயர் முன்பு இருந்தது. ஆனால், இப்போது நிலைமை அப்படியல்ல. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆடுவார்கள். சிலர் அமைதியாகவும், மற்றவர்களுக்கு எதிர்வினையாற்ற கூடாது என்றும் ஆடுவார்கள். என்னைப் பொறுத்தவரை, நான் எப்போதும் அமைதியாக இருக்கக் கூடிய ஆளில்லை.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் எங்களுக்கு எதிராக வார்த்தை போர் போன்ற ஏதேனும் செயல்களில் ஈடுபட நினைத்தால் நாங்களும் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திட்டங்களை வகுத்து வைத்துள்ளோம்' என சுப்மன் கில் தெரிவித்துள்ளார். முன்னதாக, நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் சுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் 43 ரன்களும், 65 ரன்களும் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
