"முன்னாள் 'வீரர்'ன்னு கூட பாக்காம இப்டி கலாய்ச்சிட்டாரு..." 'மீம்' ஒன்றை பகிர்ந்து... சிறப்பான 'பதிலடி' கொடுத்த 'வாசிம் ஜாஃபர்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று டி 20 தொடரை கைப்பற்றியுள்ளது.

முன்னதாக, ஒரு நாள் தொடரை 1 - 2 என இழந்திருந்த நிலையில், டி 20 போட்டிகளில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது. அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா, கடைசியில் 2 சிக்ஸர்களை அடித்து வெற்றியை உறுதி செய்தார். இந்திய பந்து வீச்சில் நடராஜன் சிறப்பாக பந்து வீசியிருந்தார்.
இந்நிலையில், ட்விட்டரில் மீம்ஸ்களை அதிகம் பகிர்வதில் பெயர் போன இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாஃபர், தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் வாகனை குறிப்பிட்டு மீம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன், மைக்கேல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி உறுதியாக வீழ்த்தும்' என பபதிவிட்டிருந்தார்.
Early call ... I think Australia will beat India this tour in all formats convincingly ... #AUSvIND
— Michael Vaughan (@MichaelVaughan) November 27, 2020
ஆனால், தற்போது டி 20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில், வாகனின் பதிவை மீம்ஸ் ஒன்றுடன் இணைத்து ஜாஃபர் பகிர்ந்துள்ளார். அவரின் மற்ற ட்விட்டர் பதிவுகளை போல, வாகனை கலாய்த்து பகிர்ந்துள்ள இந்த பதிவும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
#AusvInd https://t.co/TPjLgHAvO7 pic.twitter.com/xxAGUiyRuG
— Wasim Jaffer (@WasimJaffer14) December 6, 2020

மற்ற செய்திகள்
