"போட்றா 'வெடி'ய..." 'ரோஹித்' ஷர்மா உடல்நிலை குறித்து வெளியான லேட்டஸ்ட் 'அப்டேட்'... மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி, அடுத்ததாக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

முதலில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிய நிலையில், அதற்கடுத்த படியாக நடந்த டி 20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 17 ஆம் தேதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்தியா திரும்பவுள்ளார்.
அதே போல வேகப்பந்து வீச்சாளராரான இஷாந்த் ஷர்மாவும் காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை. ரோஹித் ஷர்மா டெஸ்ட் தொடரில் இடம்பெறுவாரா என்ற கேள்வி இருந்து வந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலை தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளி வந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக அவதிப்பட்ட ரோஹித் ஷர்மாவிற்கு ஆஸ்திரேலியா அணிக்கான ஒரு நாள் போட்டி மற்றும் டி 20 தொடரில் இடம் கிடைக்கவில்லை. டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கப்படும் முன் அவர் தேறி விடுவார் என டெஸ்ட் அணியில் அவரது பெயர் இடம்பெற்றிருந்தது. இதற்காக, பெங்களூருவிலுள்ள இந்திய அகாடெமியில் ரோஹித் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
இதனையடுத்து, தற்போது உடல்நிலை பரிசோதனையில் ரோஹித் ஷர்மா தேறி விட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
கோலி, இஷாந்த் ஷர்மா ஆகியோர் டெஸ்ட் தொடரில் இல்லாத நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா என்ற கேள்வி பரவலாக இருந்தது. ஆனால், ரோஹித் ஷர்மா மீண்டும் அணியில் இடம்பெறுவது தொடர்பான செய்திகள் மூலம் ரசிகர்கள் சற்று புத்துணர்ச்சியடைந்துள்ளனர்.

மற்ற செய்திகள்
