"எனக்கும் 2 குழந்தைகள் இருக்காங்க".. வெளிநாட்டில் குழந்தையுடன் தவித்த பெண்.. ஏர்போர்ட்டில் அஜித் செய்த நெகிழ்ச்சி செயல்! வைரல் பதிவு

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Pichaimuthu M | Apr 14, 2023 12:22 PM

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித்குமார்.

A fan about Ajithkumar gesture while traveling to Chennai

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது.

துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் தியேட்டரை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் துணிவு படம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. உலக அளவிலும் நெட்பிளிக்ஸ் தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் நடிகர் அஜித் குமார் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஒரு கட்ட சுற்றுப்பயணத்தை முடித்த அஜித்குமாரின் அடுத்த கட்ட பைக் சுற்றுப்பயணம் குறித்த தகவலை சில நாட்களுக்கு முன் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.

அதில், "லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு ,திரு அஜித் குமார் துவங்க இருக்கும் 2ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு  (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது." என சுரேஷ் சந்திரா ட்வீட் செய்திருந்தார்.

அஜித் நடிக்கும் அடுத்த படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா நிறுவனம் சார்பில் அதன் ஹெட் தமிழ்குமரன், ஏகே 62 படம் குறித்து பதில் அளித்திருந்தார்.  படம் அப்டேட் எப்போ வரும்?" என்ற கேள்விக்கு "நல்ல செய்தி அடுத்த மாதம் வரும்" என தமிழ் குமரன் பதில் அளித்தார்.

நடிகர் அஜித் குமார், சிலநாட்களுக்கு முன் தனது ரசிகர் ஒருவருடன் பிரிட்டனில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் " என் மனைவி இன்று கிளாஸ்கோவில் இருந்து சென்னைக்கு பயணம் செய்கிறாள். எங்களுடைய 10 மாத குழந்தையுடன் தனியாக பயணம் செய்கிறாள். இன்று லண்டன் ஹீத்ரோவில் நடிகர் அஜித்குமாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவள் ஒரு கேபின் சூட்கேஸ் மற்றும் ஒரு குழந்தை பையுடன் பயணம் செய்தாள். அப்போது நடிகர் அஜித் ஒரு படத்திற்கு போஸ் கொடுத்தது மட்டுமின்றி, எனது மனைவி தனியாக வந்துள்ளதை புரிந்து கொண்டு அங்கிருந்து என் மனைவி கொண்டு வந்த பையை எடுத்துச் செல்லும் சூப்பர் மனிதராக அஜித் இருந்தார். என் மனைவி இச் செயலால் தயங்கிய போது அஜித் இவ்வாறு பதிலளித்தார்.  "பரவாயில்லை. எனக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதனால் இச்சூழல் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும்" என அஜித் பதில் அளித்தார். அவர் பையை விமானம் வரை தனது கேபின் சூட்கேஸுடன் எடுத்துச் சென்றார், அவர் அதை கேபின் குழுவினரிடம் கொடுத்து, பை என் மனைவியின் இருக்கையில் வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தார். அவருடன் ஒரு நபர் பயணம் செய்தார், அவர் "தலைவா நீங்க எதுக்கு, நான் கொண்டு வரேன்" என்று கூறினார், அவர் 'பரவாயில்லை' என்று பதிலளித்தார். ஷட்டில் பஸ்ஸில் பயணம் செய்யும் போது என் மனைவி மீண்டும் அவரிடம் "அதை நான் கொண்டு வருகிறேன்" என்று கேட்டார், அவர் அதற்கு மறுத்துவிட்டார். அவருடைய அந்தஸ்த்தில் ஒரு ஆளுமை இதைச் செய்வது என்னைத் தளர்த்தியது. அவரது அணுகுமுறை முற்றிலும் தன்மையானது." என அந்த ரசிகர் பதிவிட்டுள்ளார். அஜித் உடன் அந்த ரசிகரின் மனைவி எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karthik (@chelskarthik)

Tags : #AJITHKUMAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. A fan about Ajithkumar gesture while traveling to Chennai | Sports News.