CSKVSRR: “அதெல்லாம் என் முடிவு இல்ல. அது எனக்கு தரப்பட்ட ROLE” – ஆட்டநாயகன் அஸ்வின்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By K Sivasankar | Apr 13, 2023 04:43 PM

சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான போட்டி சென்னையில் நடந்தது.

IPL 2023 It was team decision Ravichandran Ashwin CSKvRR

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆடிய ஜோஸ் பட்லர் அரைசதம் 52 ரன்கள் அடித்து அரைசதம் விளாசினார். தவிர தேவ்தத் படிக்கல்(38), அஷ்வின் (30), ஹெட்மயர்(30) ஆகியோர் அடித்த ரன்களும் சேர்த்து மொத்தம் 20 ஓவரில் 175 ரன்கள் அடித்தது சிஎஸ்கே.

அதன் பிறகு 176 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே அணி விரட்டியதில், தோனி மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் கடைசியில் சிக்ஸர் விளாசினர். எனினும் 20 ஓவர் முடிவில் 172 ரன்கள் அடித்து 3 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியுற்றது.

அதாவது 3 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வென்றது. இந்த போட்டியில் பேட்டிங்கில் 30 ரன்கள் குவித்த அஸ்வின் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டார். 25 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

ஆட்டம் முடிந்த பின்னர் பேசிய அஸ்வின், “நான் எப்போது பேட்டிங் பண்ணாலும், அந்த முடிவு என்னுடையது என நினைக்கின்றனர். ஆனால் அது உண்மை அல்ல. அணியின் நிர்வாகம் எனக்கு வழங்கும் ரோல் அது. படிக்கல் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரை இழந்த பின்னர், மிடில் ஓவரில் விளையாட வேண்டும் என்பதனால் நான் இறங்கினேன்.  என்னுடைய பேட்டிங்கானது இப்படிதான் இருக்கும். ஒருசில பந்துகளை முதலில் எடுத்துக் கொள்வேன், அதன் பிறகு சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வேன். ஆனால் சென்னை மைதானத்தில் பேட்டிங் ஆடுவது அவ்வளவு ஈஸி கிடையாது. எனினும் டெஸ்ட் போட்டிகளில் நல்ல பேட்டிங் ஃபார்மில் இருந்ததால், இங்கும் என்னால் சிறப்பாக ஆட முடிந்தது.

கடந்த 2 வருடமாகவே நான் பேட்டிங்கில் சிறப்பாக பயிற்சி எடுக்கிறேன்.  முன்பில்லா அளவில் பேட்டிங்கில் என்னால் இப்போது முடிகிறது எனும்போது மகிழ்ச்சி அடைகிறேன். வெற்றியோ தோல்வியோ நான் எனது அணிக்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என நினைக்கிறேன்” கூறினார்.

Tags : #ASWIN #CSKVRR #RRVCSK #RAVICHANDRAN ASHWIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL 2023 It was team decision Ravichandran Ashwin CSKvRR | Sports News.