"அந்த சோகத்தை புதைத்துக்கொண்டு.. அதுதான் அஜித்தின் பண்பு".. நடிகர் பார்த்திபனின் உருக்கமான பதிவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அஜித் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார். இந்த பதிவு ரசிகர்களை நெகிழ செய்திருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.
அஜித் குமார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது. துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.
சோகம்
இந்நிலையில் நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு நேற்று பெசண்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற்றது. அவருக்கு வயது 84, மறைந்த சுப்ரமணியம் அவர்களுக்கு அனில் குமார், அனுப் குமார், அஜித்குமார் என்ற மூன்று மகன்கள் உள்ளனர்.
சுப்ரமணியம் அவர்களின் மறைவுக்கு தமிழக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், சசிகலா, விஜயபாஸ்கர், விஜய் வசந்த், நடிகர் ஜி எம் சுந்தர், நடிகை சாக்ஷி அகர்வால், நடிகர் சிவா, அருண் விஜய் ஆகியோர் அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உருக்கம்
முன்னதாக நடிகர் அஜித் வீட்டில் வைக்கப்பட்ட உடலுக்கு இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ், ஏ. எல். விஜய், மகிழ் திருமேனி, லைகா தமிழ் குமரன், பார்த்திபன், நடிகர் பிரசன்னா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இந்த சூழ்நிலையில் நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
அதில்,"தந்தையின் மறைவின் போது,நண்பர் அஜீத் உள்ளூரில் இருந்தது நல்லது.சோகத்தை புதைத்துக் கொண்டு வந்தவர்க்கு நன்றி சொன்னார். மயானம் செல்ல தயாரானபோது காரில் அமர்ந்தவர் என்னருகில் சோழா பொன்னுரங்கம் (அமராவதி தயாரிப்பாளர்) நிற்பதை கண்டு இறங்கி வந்து நன்றி சொல்லிச் சென்ற பண்பு அவருக்கானது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தந்தையின் மறைவின் போது,நண்பர் அஜீத் உள்ளூரில் இருந்தது நல்லது.சோகத்தை புதைத்துக் கொண்டு வந்தவர்க்கு நன்றி சொன்னார்.மயானம் செல்ல தயாரானபோது காரில் அமர்ந்தவர் என்னருகில் சோழா பொன்னுரங்கம் (அமராவதி தயாரிப்பாளர்)நிற்பதை கண்டு இறங்கி வந்து நன்றி சொல்லிச் சென்ற பண்பு அவருக்கானது https://t.co/nQXnClzNs2
— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 24, 2023

மற்ற செய்திகள்
