'பந்துவீச்சில் சந்தேகம்’ சுழற்பந்து வீச்சாளருக்கு 1 வருடம் விளையாட தடை..! அதிரடியாக அறிவித்த ஐசிசி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Sep 20, 2019 09:11 AM

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்செயா 1 வருடம் பந்து வீச்ச ஐசிசி தடை விதித்துள்ளது.

Akila Dananjaya banned from bowling for one year

நியூஸிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. இப்போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்செயாவின் பந்துவீச்சு சந்தேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக நடுவர்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் புகார் அளித்தனர்.

இதனை அடுத்து இவரது பந்து வீச்சு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் அகிலா தனஞ்செயா விதிகளுக்கு புறம்பாக பந்து வீசியது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர் 2 வருடத்துக்குள் 2 -வது முறையாக பந்துவீச்சு சர்ச்சையில் சிக்குவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அகிலா தன்ஞ்செயா பந்துவீச ஒரு வருடம் தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

Tags : #ICC #AKILADANANJAYA #SRILANKA #BANNED #CRICKET #SPINNER