WORKFROMHOME-னு சொல்லிட்டு பாதி பேர் ‘இந்த’ வேலையதான் பாத்திருக்காங்க.. வெளியான ‘ஷாக்’ ரிப்போர்ட்..!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்லாக்டவுனில் வொர்க் ஃப்ரம் ஹோம் வேலை செய்பவர்கள் குறித்து நடைபெற்ற ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 47 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல நாடுகளில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) வேலை செய்பவர்கள் குறித்து பகீர் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதாவது உலகம் முழுவதும் வீட்டில் இருந்து அலுவலக பணியை செய்யும் ஊழியர்களில் 51% பேர் வேலைகளுக்கு நடுவே லேப்டாப்பில் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதாக சைபர் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் 18% பேர் அலுவல லேப்டாப்பிலேயே ஆபாச வீடியோக்கள் பார்ப்பதாகவும் கண்டறித்துள்ளனர்.
இதனால் ஊழியர்களுக்கு வேலையில் கவனச் சிதைவு ஏற்பட்டு உற்பத்தி குறைய வாய்ப்புகள் உள்ளதாக சைபர் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கி (Kaspersky) தெரிவித்துள்ளது. மேலும் 31% பேர் அலுவலகத்தை காட்டிலும் வீட்டில் தான் அதிக நேரம் வேலை செய்வதாகவும், 46% பேர் தங்களின் தனிப்பட்ட நேரத்துக்கு எடுத்துக்கொள்ளும் நேர அளவும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் வேலை மற்றும் குடும்பத்தை பிரித்துப் பார்க்க முடியாத நெருக்கடி நிலை உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தனிப்பட்ட வேலைக்கும் அலுவலக லேப்டாப்பை பயன்படுத்தும் செயல் அதிகரித்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். இது தொடர்ந்தால் அலுவலக கலாச்சாரத்தை பாழ்படுத்திவிடும் என அதன் ஆய்வாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
