'மதியம்' தூங்குவதால் 'இப்படியொரு' நன்மையா?... 'ஆச்சரியம்' தரும் ஆய்வு முடிவுகள்!...

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்

By Saranya | May 04, 2020 03:03 PM

மதியம் தூங்குவதால் உடல் எடை குறையும் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

Corona Lockdown Can Afternoon Naps Help With Weight Loss

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள லாக்டவுன் காரணமாக பலருக்கும் வேலை நேரம், தூங்கும் பழக்கம் ஆகியவற்றில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மதியம் சிறிது நேரம் தூங்கும் பழக்கம் தற்போது பலரிடமும் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக மதியம் தூங்குவதால் உடல் எடை அதிகரிக்குமோ என்ற பயமும் அதில் பலருக்கு உள்ளது. ஆனால் உண்மையில் மதியம் தூங்குவதால் உடல் எடை அதிகரிக்காது மாறாக குறையும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதனால் உடலுக்கு நன்மையே எனவும் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக Archives of Internal Medicine நடத்திய ஆய்வில் அதிக எடை கொண்டவர்கள் மற்றவர்களைவிட  தினமும் 16 நிமிடங்கள் குறைவாக தூங்குவது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல A Harvard Medical School நடத்திய ஆய்வில் மதியம் தூங்குவதால் 10% வரை கலோரிகளைக் குறைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சரியான தூக்கம் இல்லையென்றால் அதிகம் பசி எடுக்கும் ஹார்மோன்கள் சுரந்து, அதிகம் சாப்பிடும்போது உடல் எடை அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.