‘கொரோனா’ அச்சுறுத்தலால்... வீட்டிலிருந்து ‘வேலை’ செய்பவர்களுக்காக... ‘சிறப்பு’ ஆஃபரை அறிவித்துள்ள ‘பிரபல’ நிறுவனம்...

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Saranya | Mar 23, 2020 04:12 PM

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு வொர்க் ஃபிரம் ஹோம் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

Jio Launches Work From Home Data Plan Details Inside

முன்னதாக பிஎஸ்என்எல் மற்றும் ஆக்ட் ஃபைபர்நெட் ஆகியவை வொர்க் ஃபிரம் ஹோம் சலுகையை அறிவித்த நிலையில், தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் இந்த சலுகையை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதையடுத்து பல நிறுவனங்கள் அதன் பணியாளர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாடிக்கையாளர்களுக்காக வொர்க் ஃபிரம் ஹோம் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி ரூ 251 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 51 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படும். மேலும் இந்த சலுகையில் டேட்டாவைத் தவிர வேறு எந்த பலன்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #CORONAVIRUS #LOCKDOWN #WORKFROMHOME #AIRTEL #JIO #BSNL #VODAFONE