'கொரோனாவால்'.. 'வேலை இழந்த' 30 லட்சம் 'ஊழியர்கள்'! .. வாரம் ஒருமுறை 'மானிய நிதி வழங்க' முடிவெடுத்த 'நாடு'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | May 11, 2020 08:52 AM

கனடாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அங்கு பொது முடக்கும் அறிவிக்கப்பட்டது. மக்கள் இதனால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்க, வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களும் அங்கு செயல்படவில்லை.

country gives 610 dollars to companies for employees job safety

இதன் காரணமாக அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் வழக்கமாக இல்லாத அளவில், அதாவது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் உச்சத்தை தொட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம், இதுவரை அங்கு 30 லட்சம் பேர் வேலைகளை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  சுமார் 5.2 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக வேலையில்லா திண்டாட்ட விகிதாச்சாரம் உயர்ந்துள்ளதாகவும் 1982-க்கு பிறகு இரண்டாவது உயர்ந்த வீதம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் பிரச்சினையால் தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் முடங்கியதுதான் கனடாவின் இந்நிலைமைக்கு  காரணம் என்றும் அந்நாட்டில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஊழியர்களை நிறுவனங்கள் தொடர்ந்து சம்பளப் பட்டியலில் வைத்திருப்பதற்காகவே ஒரு மானிய திட்டத்தையும் கனடா அரசு செயல்படுத்தி வருவது.

அந்தத் திட்டத்தின்படி, நிறுவன அதிபர்கள் வாரம் ஒன்றுக்கு 610 டாலருக்கு (ரூ.45 ஆயிரம் இந்திய மதிப்பில்) மிகாமல் ஒரு ஊழியரின் ஊதியத்தில் 75 சதவீதத்தை 12 வாரங்களுக்கு அரசிடமிருந்து மானியமாக பெறமுடியும் என்றும் அடுத்த மாதம் 6-ஆம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. கனடாவின் பொருளாதாரத்தை மீட்பதற்கும் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் ஏற்ற சம்பளம் மானியத் திட்டம் மேலும் நீட்டிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த வியாழக்கிழமை வரையில் தங்களது 17 லட்சம் ஊழியர்களுக்காக 1 லட்சத்து 20 ஆயிரம் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.