‘வீட்ல இருந்தே வேலை செய்யுங்க’... ‘கொரோனா வைரஸ் தாக்கத்தால்’... ‘சீனாவில்’... ‘தற்காலிக மூடப்பட்ட அமெரிக்க நிறுவனம்’!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Sangeetha | Jan 30, 2020 04:10 PM

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் உள்ள தனது அலுவலங்களை கூகுள நிறுவனம் தற்கொலிகமாக மூடியுள்ளது.

Technology giant Google temporarily shut down in China

2020-ம் ஆண்டு தொடங்கியது முதலே சீனாவுக்கு பெரிய தலைவலியாக அமைந்து விட்டது. அங்குள்ள ஹூபெய் மாகாணத்தின் தலைநகரான வுகானில் சமீபத்தில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பான ஆய்வில், அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. கடல்   உணவு, வனவிலங்கு சந்தையில் நோயினால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து இந்த வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், தீவிர நிலையை எட்டி  உள்ளது.

கொரோனா வைரஸ் சீனா உள்ளிட்ட 16 நாடுகளில் பரவி உள்ளது தெரிய வந்துள்ளது. சீனாவில் மட்டும் இதுவரை 170 பேர் பலியாகி உள்ளனர். 7000 க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவின் முக்கிய பல நகரங்களிலும், ஹாங்காங்கிலும் அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. கொரோனா வைரஸ் பரவி வருவதை கருத்தில் கொண்டு, அந்த அலுவலகங்களை தற்காலிகமாக கூகுள் நிறுவனம் மூடிவிட்டது. இதேபோல் தைவானிலும் அலுவலகங்களை கூகுள் தற்காலிகமாக மூடியுள்ளது.

சமீபத்தில் சீனாவில் துவங்கப்பட்டுள்ள கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பெட் நிறுவன அலுவலகமும் மூடப்பட்டுள்ளது. அதனுடன் தாய் நாட்டுக்கு உடனடியாக ஊழியர்களை திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ள கூகுள் நிறுவனம், தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.  மேலும் கூகுள் மட்டுமில்லாது, பல்வேறு நிறுவனங்கள் சீனாவில் அரசு அறிவுறுத்தலின்படி மூடப்பட்டுள்ளதால், பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags : #GOOGLE #CORONAVIRUS #EMPLOYEES