"இது சி.இ.ஓ.-வா..." "இல்ல லாரன்ஸ் மாஸ்டர் தங்கச்சியா..." "ஆபிஸ்குள்ள மரண மாஸ் ஆட்டம் போடுறாங்க... "இதையெல்லாம் நோட் பண்ணுங்க 'தமிழ்நாடு' சி.இ.ஓ.'ஸ்...
முகப்பு > செய்திகள் > இந்தியாஅலுவலகத்தில் ஊழியர்களுடன் சேர்ந்து நிறுவனத்தின் சி.இ.ஓ. மரணமாஸ் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் மன அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, ஊழியர்களின் மன அழுத்தத்தை குறைக்க வேலைகளுக்கு நடுவே சில நிறுவனங்கள் நடனம், விளையாட்டு என பல்வேறு ஆக்டிவிட்டீஸ்களுக்கு ஏற்பாடு செய்கின்றன.
அந்தவகையில் வெல்ஸ் பன் நிறுவனத்தின் சி.இ.ஓ தீபாலி கொயென்கா ஊழியர்களை உற்சாகமூட்ட அலுவலக நேரத்தில் நடனமாடி மகிழும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. தீபாலி கொயென்கா சிறந்த தலைமை நிர்வாகி என பலராலும் பாராட்டப்படுபவர். ஊழியர்களுடன் இயல்பாக பழகும் தன்மை கொண்ட அவர், அவர்களுடன் நடனமாடி உற்சாகமூட்டிய செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
Rare to see a CEO dance and have fun in an office setting. That’s the way to create a happy culture @DipaliGoenka #welspun. pic.twitter.com/B6LAd2u3tr
— Harsh Goenka (@hvgoenka) February 18, 2020
