‘இப்போ அவுங்க கையில் இது இருக்கறது’... ‘ரொம்பவும் முக்கியம்’... ‘ஆறுதலாய் ஊழியர்களுக்கு’... ‘ஃபேஸ்புக் நிறுவனம் செய்த காரியம்’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Mar 18, 2020 11:11 PM

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் சூழலில், ஃபேஸ்புக் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. 

Facebook offers 6 months bonus to 45,000 Full time employees

பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனம், உலகையே கொரோனா ஆட்டிப்படைத்து வருவதால், இந்த வேளையில் அதன் ஊழியர்கள் கைகளில் பணம் இல்லாமல் தவிக்கக் கூடாது என நினைத்துள்ளது. இதையடுத்து தனது 45,000 ஊழியர்களுக்கு 1000 டாலர்கள் போனஸ் ( அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 75,000 ஒருவருக்கு)ஆக கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. கொடிய தொற்று நோய்க்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் தனது ஊழியர்களை ஆதரிக்கும் விதமாகத் தான் இப்படி ஒரு அதிரடி முடிவினை எடுத்துள்ளது ஃபேஸ்புக்.

கூடுதலாக ஆறு மாத கால போனஸினையும் ஊழியர்கள் பெறுவார்கள் என்று, இது குறித்து ஃபேஸ்புக்கின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க் ஊழியர்களுக்கு அளித்துள்ள மெமோவில் ககூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.  மேலும் ஊழியர்களுக்கு அறிவித்துள்ள இந்த போன்ஸ் தவிர, 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் 30,000 தகுதிவாய்ந்த சிறு வணிகங்காளுக்கு 100 மில்லியன் டாலர் ரொக்க மானியங்களையும் கடன்களையும் வழங்குவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுதவிர கொரோனா பாதிப்பு தொடர்பான செய்திகளை முறையாக பொறுப்புணர்வுடன் பதிவு செய்ய லோக்கல் மீடியா அசோசியேஷன் மற்றும் லென்ஃபெஸ்ட் ஊடகக் கல்வி நிறுவனத்துடனும் ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் அந்நிறுவனங்களுக்கு ஃபேஸ்புக் சார்பில் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி வழங்கப்படுகிறது.

Tags : #FACEBOOK #IT #EMPLOYEES #BONUS #CORONAVIRUS