'கொரோனா தாக்கம்...' 'ஆட்குறைப்பில் ஈடுபடும் நிறுவனங்கள்...' '2021ம் ஆண்டு நடக்கப் போவது என்ன?...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Apr 25, 2020 09:05 PM

கொரோனா தாக்கம் அதிகரித்துவரும் வேளையில் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் வேலையிலிருந்து நீக்கி வருகின்றன. இதனால் ஏராளமானோர் வேலையிழந்து தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது, ஒப்பந்த அடிப்படியில் வேலைக்குச் சேர்ந்த ஊழியர்களே ஆவர்.

Employees who lose their jobs due to corona impact

கொரோனா தாக்கத்தால் பலத்த சரிவு கண்டிருக்கும் துறைகளில் முக்கியமானது மார்கெட்டிங் துறை. இதில் வேலை செய்த பலர் வெளி வேலைகளில் ஈடுபட்டு இருப்பதால் இவர்களது வேலை பறிபோயுள்ளது.

புக் மை ஷோ, ஓயோ, உடான் உள்ளிட்ட நிறுவனங்கள் அதீத ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளன. பல நிறுவனங்களில் நிர்வாகிகள் வேலை பறிபோகாது என சில மாதங்களுக்கு முன்னர் ஊழியர்களுக்கு உறுதி அளித்து விட்டு பின்னர் வேலையை ராஜினாமா செய்ய உத்தரவிடுகின்றன.

கொரோனா முடிவுக்கு வந்ததும் பல ஆன்லைன் வர்த்தக, இடைத்தரகு நிறுவனங்கள் பலத்த நஷ்டம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021ம் ஆண்டு பலர் தங்கள் துறையில் வாய்ப்பில்லாமல் வேறு துறையை தேர்ந்தெடுத்து வேலை செய்யும் அபாயத்துக்குத் தள்ளப்பட உள்ளனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பலர் பாதி சம்பளத்துக்கு வீட்டில் இருந்து வேலை செய்து வரும் நிலையில் ரியல் எஸ்டேட், காப்பீடு, ஆன்லைன் மார்கெட்டிங் உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அந்த துறையில் தங்களது முன் அனுபவத்தை வைத்து மீண்டும் வேலைக்கு சேர்ந்து மேல் எழுவது மிகக் கடினம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ரிவிகோ, ஓலா, பேடியம், குவிக்கர், ஜொமேட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த ஆண்டே தங்களது ஆரம்ப ஊழியர்கள் பலரை வேலையை விட்டு நிறுத்தியது.

தற்போது பல கோடி கடனில் மூழ்கியுள்ள ஆன்லைன் நிறுவனங்கள் பழைய நிலைக்கு வர பல மாதங்கள் பிடிக்கும். அதுவரை இந்த நிறுவனங்களில் நிர்வாகப் பொறுப்பு வகித்த பலர் வேலையின்மையால் அவதிப்படுவர் எனக் கூறப்படுகிறது.