கொரோனா எதிரொலி!.. 2021ம் ஆண்டு வரை... அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்!.. முழு விவரம் உள்ளே

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Apr 20, 2020 02:53 PM

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிஎம் கேர்ஸ் நிதிக்கு நேரடியாக பிடித்தம் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

center cuts 1 day salary of govt employess till march 2021

கொரோனா வைரஸ் நிவாரணத்துக்காக பிஎம் கேர்ஸ் நிதிக்கு அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளங்களிலிருந்து நன்கொடை அளிப்பது விருப்பத்தின் அடிப்படையில் அல்லாமல் நேரடியாக சம்பளங்களிலிருந்து பிடிக்கப்படுகிறது.

மேலும் நன்கொடை அளிக்க விருப்பமில்லாதவர்கள் எழுத்து மூலம் பதிலளிக்க வேண்டும் என்று அரசு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று நிதியமைச்சகத்தின் வருவாய்த்துறையிலிருந்து அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. 

அதில், "மார்ச் 2021ம் ஆண்டு வரை ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தங்கள் ஒருநாள் சம்பளத்தை பிஎம் கேர்ஸ் நிதிக்கு கொடுக்குமாறு முறையீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு எந்த அதிகாரியோ அல்லது ஊழியரோ ஆட்சேபணை தெரிவித்தால் அவர்கள் எழுத்துப் பூர்வமாக டிடிஓவிடம் தங்கள் பதிலை அளிக்கலாம்." என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைகள் ஊழியர்கள் சங்கம் மூலமாக வந்தது தங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது என்று தெரிவித்தனர். மேலும் ஆட்சேபணைகளை எழுத்து மூலம் கோருவதும் புதிதாக உள்ளது என்று சிலர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக இணைச் செயலர் மட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது, "12 மாதங்களுக்கு ஒருநாள் சம்பளம் என்பது 12 நாள் சம்பளமாகும் இது அவர்கள் மாதச் சம்பளத்தில் 40% ஆகும். இந்திய அரசு ஊழியர்கள் சராசரியாக ரூ.50,000 முதல் ரூ.80,000 வரை சம்பளம் வாங்குகின்றனர். அதாவது ஒரு சம்பளம் 3 பேர் அவரை நம்பியிருப்பார்கள் என்பதன் அடிப்படையில் தான். எனவே, அவர்களிடம் இந்தக் கோரிக்கை வைப்பது அவர்களுக்கு கொஞ்சம் கடினம்தான்" என்றார்.

முன்னதாக அரசு மருத்துவமனையின் 4 ரெசிடண்ட் டாக்டர்கள் நேரடியாக தங்கள் சம்பளங்களிலிருந்து பிஎம் கேர்ஸ் நிதிக்கு பிடித்தம் செய்வதற்கு ஆட்சேபணை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.