‘கரைபுரண்டு ஓடிய கங்கை வெள்ளம்’.. ‘நொடிப்பொழுதியில் அடித்து செல்லப்பட்ட பள்ளிக்கூடம்’.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Sep 17, 2019 09:37 AM

கங்கை நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பள்ளிக்கூடக் கட்டிடம் ஒன்று அடித்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

WATCH: School gets washed away in river Ganga in Bihar

பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கங்கை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் பீகார் மாநிலம் கத்திஹார் என்னும் பகுதியில் உள்ள பள்ளிக் கட்டிடம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தின் போது பள்ளியில் மாணவர்கள் யாரும் இல்லை என தெரிவித்துள்ளனர். இதனால் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை பள்ளியில் உள்ள மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கபட்டது என கூறப்படுகிறது.

Tags : #GANGA #RIVER #SCHOOL #BIHAR #FLOOD