‘ஹெல்மெட்டுக்குள்’ இருந்த ‘ஆபத்து’ தெரியாமல்... ‘11 கிமீ’ பயணம்... வண்டியை நிறுத்தியபின் ‘அதிர்ந்துபோய்’ மயங்கிய ‘பரிதாபம்’...
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவைச் சேர்ந்த ஒருவர் தனது ஹெல்மெட்டுக்குள் பாம்பு இருப்பதை அறியாமல் அதை அணிந்துகொண்டு 11 கிமீ தூரம் பயணித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பள்ளி முடிந்து தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது 11 கிமீ தூரம் பயணித்த அவர் வாகனத்தை நிறுத்திய பின்னர் தான் அணிந்திருந்த ஹெல்மெட்டுக்குள் விஷப்பாம்பு ஒன்று இறந்துகிடந்ததைப் பார்த்துள்ளார்.
இதையடுத்து ஹெல்மெட்டுக்குள் இருந்த விஷப்பாம்பை பார்த்து அதிர்ந்துபோன அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அதன்பிறகு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய உடலில் விஷம் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அதிருஷ்டவசமாக விஷப்பாம்பினால் பாதிப்பு ஏதுமின்றி தப்பித்த அவர் முதல்வேளையாக தன்னுடைய ஹெல்மெட்டை தீ வைத்து எரித்துள்ளார்.
Tags : #KERALA #MAN #BIKE #HELMET #SNAKE
